Home Ads

12/13/2020

12 - வணிகவியல் - அலகு 2 - அலகுத்தேர்வு 3

12 ஆம் வகுப்பு வணிகவியல்
UNIT TEST 3

UNIT 2 நிதிச்சந்தை-1

பாடம்4 - நிதிச்சந்தை- ஓர் அறிமுகம்

பாடம்5 - மூலதனச்சந்தை

பாடம்6 - பணச்சந்தை

50 மதிப்பெண் அலகுத்தேர்வு வினாத்தாள் PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


பனிரெண்டாம் வகுப்பு - 2020-2021 

வணிகவியல் - அலகு-2 

அலகுத் தேர்வு-3 

மதிப்பெண்-50

நேரம்- 1:30 மணி 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10*1+10) 


1. மூலதனச்சந்தை என்பது ---------- க்கான ஒரு சந்தை ஆகும். 

அ. குறுகியகால நிதி

ஆ. நடுத்தரகால நிதி

இ. நீண்டகால நிதி

ஈ. குறுகியகால நிதி 


2. உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துதல் ---------- நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

அ. உடனடியாக

ஆ. எதிர்காலத்தில்

இ. நிலையானது

ஈ. ஒரு மாதத்திற்கு பின்னர் 


3. முதல்நிலைச் சந்தை என்பது பத்திரங்களை பிணையங்களை ---------- முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

அ. முதன்முறை

ஆ. இரண்டாம் முறை

இ. மூன்றாம் முறை

ஈ. பலமுறை 


4. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

அ. 1990

ஆ. 1992

இ. 1998

ஈ. 1997


5. பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ---------- 

அ. வணிக வங்கி

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 

இ. பாரத ஸ்டேட் வங்கி

ஈ. மையவங்கி 


6. கருவூல இரசீது ஆணை என்பது ---------- உடையது 

அ. அதிக நீர்மைத்தன்மை

ஆ. குறைந்த நீர்மைத்தன்மை 

இ. நடுத்தர நீர்மைத்தன்மை

ஈ. வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை 


7. பணச்சந்தை நிறுவனங்கள் ---------- ஆகும். 

அ. முதலீட்டு அமைப்புகள்

ஆ. அடமானக்கடன் வங்கிகள் 

இ. ரிசர்வ் வங்கி

ஈ. வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 


8. சந்தைப்படுத்தக்கூடிய உரிமையிலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ---------- என்று குறிப்பிடுகிறோம். 

அ. கருவூல இரசீது

ஆ. வைப்புச் சான்றிதழ்

இ. வணிக இரசீது

ஈ. அரசுப் பத்திரங்கள் 


9. குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ---------- என்று அழைக்கப்படுகிறது 

அ. கருவூல இரசீதுகள்

ஆ. வணிகத்தாள்

இ. வைப்புச்சான்றிதழ்

ஈ. அரசுப்பத்திரங்கள்


10. பணச்சந்தையில் இடர் என்பது ---------- 

அ. அதிகம்

ஆ. சந்தை இடர்

இ. குறைந்த கடன் மற்றும் சந்தை இடர் 

ஈ. நடுத்தர இடர் 


கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5*2=10) 



11. நன்கு அமைக்கப்பட்ட துறைகளின் கூறுகள் யாவை? 

12. மூலதனச்சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? 

13. OTCEI - சிறுகுறிப்பு வரைக 

14. பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

15. மாற்றுதல் என்பதன் பொருள் யாது? 


கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5*3=15) 



16. இந்தியாவில் நிதிச் சந்தையின் வரைவெல்லையை விளக்குக. 

17. இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி. 

18. தேசிய தீர்வக மற்றும் களஞ்சிய அமைப்பு- சிறு குறிப்பு வரைக. 

19. கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

20. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 


கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி (3*5=15) 



21. நிதிச்சந்தையின் பல்வேறு பணிகளை விவரி. 

22. மூலதனச்சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

23. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி.       

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *