Home Ads

12/13/2020

11 - வணிகவியல் - பாடம் 1 - வினா-விடை

11 ஆம் வகுப்பு வணிகவியல்
STUDY MATERIALS

CHAPTER 1 இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

ஐந்து மதிப்பெண் வினா-விடை

PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


பாடம் 1 இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி 


சரியான விடையைத் தேர்ந்தெடு: 


1. பாண்டிய பேரரசில் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ---------- என்று பெயர். 
அ) அங்காடி 

2. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது. 
அ) போக்குவரத்து 

3. அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது? 
அ) கௌடில்யர் 

4. வியாபாரம் மற்றும் வணிகம் ---------- பேரரசில் பொதுவானவையாக இருந்தது. 
இ) பாண்டியர் 

5. ---------- முதன்முதலில் சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதியில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார். 
அ) பால்பன் 

இரண்டு மதிப்பெண் வினாக்கள் 


1. பண்டமாற்று முறை என்றால் என்ன? 

• ஒரு பொருள் மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்று முறை எனலாம். 

2. நாளங்காடி என்றால் என்ன? 

• பகலில் வியாபாரம் நடக்கும் இடம் நாளங்காடி எனப்படும் 

3. அல்லங்காடி என்றால் என்ன? 

• இரவில் வியாபாரம் நடக்கும் இடம் அல்லங்காடி எனப்படும் 

மூன்று மதிப்பெண் வினாக்கள் 


1. வணிகம் பொருள் தருக. 

பொருளாதார நடைமுறைப் பணிகளோடு தொடர்புடைய உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு, பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் துறையே வணிகம் எனப்படும். 

2. மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் - விளக்குக. 

மருவூர்பாக்கம் என்பது உள்நாட்டு நகரம் ஆகும். 

பட்டினப்பாக்கம் என்பது கடலோர நகரம் ஆகும். 

பூம்புகாரில் உள்ள இரண்டு நகரங்கள்-மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகியவைகளில் அங்காடிகளில் இருந்தன. 

இவைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க அல்லது விற்க பல பெரு வியாபாரிகள் ஒன்று கூடினர். 

3. பண்டைய தமிழகத்தின் வர்த்தக வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன?  

சங்க காலத்தில் உள்நாட்டு வியாபாரமும், வெளிநாட்டு வியாபாரமும் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. 

உள்நாட்டு வியாபாரத்தில் உப்பு மாற்றுப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

சங்க கால ஏடுகள் பெரு வியாபாரிகள், அவர்களுடைய பாதுகாப்புப்படை, சந்தைகள், கடைகள், மற்றும் வணிகக் குழுக்கள் பற்றிக் கூறுகிறது. 

4. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் யாவை? 

 கொற்கை 
 சாலியூர் 
 காயல்பட்டினம் 
 மருங்காவூர்பட்டினம் 
 குமரி 

5. செல்வத்தை உருவாக்குவது பற்றி அர்த்தசாத்திரங்களில் என்ன கூறப்பட்டுள்ளது? 

 கருவூலம், வரிவிதிப்பு, தொழிற்சாலைகள், வணிகம், விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கௌடில்யர் கூறுகிறார். 

 அரசு வணிக நடவடிக்கைகளின் வாயிலாக செல்வத்தை உருவாக்கி அதன் மூலம் அரசு மேலாண்மை மற்றும் மக்கள் நலன் இரண்டையும் சமநிலையில் பராமரிக்க வேண்டும். 

ஐந்து மதிப்பெண் வினாக்கள் 


1. வணிகத்தின் பல்வேறு தடைகளைக் கூறுக. 

 ஆள்சார் தடை 

 உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பே கிடையாது. இதற்கு ஆள்சார் தடை என்று பெயர். 

 வியாபாரம் இத்தடையை நீக்குகிறது. 

 இடத்தடை 

 உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் பிரிக்கும் தூரமே இடத்தடை. 

 போக்குவரத்து இத்தடையை நீக்குகிறது. 

 காலத்தடை 

 ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும் போது கிடைக்காமையே காலத்தடை ஆகும். 

 பண்டகக் காப்பகங்கள் இத்தடையை நீக்குகிறது. 

 அறிவுசார் தடை 

 சந்தை நிலவரங்களை பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய்விடக்கூடியதே அறிவுசார்; தடை ஆகும். 

 நல்ல விளம்பரம், விற்பனையாளர் சேவை இத்தடையை நீக்குகின்றன. 

 நிதித் தடை 

 உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைக்காததே நிதித்தடை ஆகும். 

 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இத்தடையை நீக்குகின்றன. 

2. பண்டமாற்று முறைக்கான நிபந்தனைகளாகக் கூறப்பட்டுள்ளன யாவை? 

 ஒவ்வொருவரும் தேவைக்கு அதிகமாகப் பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். 

 இருவருக்கும் அப்பொருட்களின் உரிமை மாற்றுத் தேவையாக இருக்க வேண்டும். 

 பரிமாற்றத்தின் போது இருவருக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட வேண்டும். 

3. வட இந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி. 

 முதல் சுல்தானான பால்பன் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார். 

 அலாவுதின் கில்ஜி பொருட்களின் விலைகளைக் குறைத்தும், பொருட்களை இறக்குமதி செய்ய மானியம் வழங்கியும் வியாபார வளர்ச்சிக்கு உதவினார். 

 அரேபியர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 

 வெள்ளி மற்றும் தாமிரம் அடிப்படையில் நாணயமுறை நிறுவப்பட்டது. 

 டெல்லி, பம்பாய், அகமதாபாத், சோனார், லாகூர் ஆகியவை முக்கிய வர்த்தக மையங்களாக விளங்கின. 

4. பண்டைய தமிழ்நாட்டின் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக. 

 பூம்புகாரில் உள்ள இரண்டு நகரங்கள்; மருவூர்பாக்கம் (உள்நாட்டு நகரம்) மற்றும் பட்டினப்பாக்கம் (கடற்கரை நகரம்) ஆகியவைகளில் அங்காடிகளில் இருந்தன. 

 இவைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க அல்லது விற்க பல பெரு வியாபாரிகள் ஒன்று கூடினர். 

 கொற்கை, தொண்டி, பூம்புகார், முசிறி ஆகிய துறைமுகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் இடங்களாக இருந்தன. 

 வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பிடம் பெற்றிருந்தது. 

 முத்துக்கள், பவளங்கள், மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல் போன்றவற்றில் பாண்டியர் ஈடுபட்டிருந்தனர். 

5. பண்டைய தமிழ்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பைப் பற்றி விளக்குக. 

 ரோமாபுரி மற்றும் கிரேக்க வர்த்தகர்கள் பழங்காலத் தமிழ்நாட்டுக்கு வந்து பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்களை சந்தித்து வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தினர். 

 சீன சோங் வம்சத்தினர் சொழர்களுடன் வலுவன வர்த்தக உறவு கொண்டிருந்தனர். 

 இந்தோனேசியா மற்றும் மலேசியாவை ஆண்டு கொண்டிருந்த ஸ்ரீவிஜய நகர சாம்ராஜ்ஜியத்தை சோழர்கள் கைப்பற்றி, சீனாவுடன் கடலோர வணிகத்தைத் தொடர்ந்தனர். 

 காவிரிப்பூம்பட்டினம் என்ற நகரம் அரசின் உதவியோடு பல்வேறு மொழிகள் பேசும் வெளிநாட்டவர்கள் ஒன்று கூடும் இடமாகத் திகழ்ந்தது. 

 துறைமுகங்கள், கலங்கரை விளக்கம், பண்டகக்காப்பகங்கள் ஆகியவை வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க அரசால் உருவாக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *