Home Ads

7/31/2022

பாடம் 1 மேலாண்மைத் தத்துவங்கள்

பாடம் 1 மேலாண்மைத் தத்துவங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. மேலாண்மை என்பது ---------- ன் செயல் ஆகும். அ) மேலாளர்
2. மேலாண்மை என்பது ஒரு ---------- இ) கலை மற்றும் அறிவியல்
3. அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கிய வளர்த்தவர் ---------- ஆ) டேலர்
4. வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ---------- என்பர். இ) வேலைப்பகிர்வு
5. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப் படிநிலை மட்டங்களின் அளவு -------ஆ)குறைவு


இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. மேலாண்மை என்றால் என்ன?
மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.
2. மேலாண்மை கருவிகளைப் பட்டியலிடுக.
• கணக்கியல்
• வணிகச் சட்டங்கள்
• உளவியல்
• புள்ளியியல்
• பொருளியல்
• தரவு செயலாக்கம்

3. அதிகாரம் என்பதன் பொருள் தருக.
• அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

4. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

• ஒரு உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையே மேற்பார்வை வீச்செல்லை ஆகும்.

மூன்று மதிப்பெண் வினாக்கள்
1. மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

‘மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துவது’ – ஹென்றி ஃபோயல்


2. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக.

அடிப்படை மேலாண்மை நிர்வாகம் முக்கிய நபர் மேலாளர் நிர்வாகி பணி நிர்வாகம், ஆளமை சட்டம், தீர்மானித்தல் அதிகாரம் மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் உயர்மட்ட அளவில் பங்கு நிறைவேற்றம் முடிவெடுத்தல் தன்மை கொள்கை செயல்படுத்துதல் கொள்கை உருவாக்குதல்

3. டெய்லரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை?

அறிவியல் கட்டை விரல் விதி அல்ல.
இணக்கம், சச்சரவின்மை
மனப்புரட்சி
தனிமனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு
ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்குமான வளர்ச்சி

5. மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை?
•உயர் அதிகாரியின் திறமை
•பணியாளர்களின் திறமை
•பணியின் தன்மை
•திட்டமிடுதலின் தன்மை
• தகவல்தொடர்பு நுட்பங்கள்

ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி.
அறிவின் தொகுப்பு
•வணிக உலகம், அரசுத்துறை, தனியார் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு கடவுச்சீட்டு போன்றது மேலாண்மை.
•மேலாண்மைக் கருவிகள்
•கணக்கியல், வணிகச்சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் விரிவடைந்துள்ளது.
தனிப்பாடப் பிரிவு
•பல்வேறு பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன.
•1951 முதல் வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகப்பாடத்தில் முதுகலைப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
நடத்தை விதி
•வாங்குவோர் ஜாக்கிரதை என்ற கோட்பாட்டிற்கு பதிலாக ‘விற்பவர் ஜாக்கிரதை’ என்ற கோட்பாடு சந்தை நடைமுறைகளை தீர்மானிக்கிறது.
•நுகர்வோர் இயக்கங்கள், தொழிற்சங்கங்களின்; அழுத்தம் மேலாண்மையை அறம் சார்ந்த விதிகளை தோற்றுவிக்க தூண்டுகிறது.
பணி ரீதியானதொரு அமைப்பு
•மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்பட வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
•மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்து பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்க வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
2. நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி.
•நவீன மேலாண்மையின் தந்தை என அழைக்கப்படுபவர் ஹென்றி போயல் ஆகும். அவரின் நவீன மேலாண்மைக் கோட்பாட்டில் 14 பிரதான கோட்பாடுகள் உள்ளன.
வேலைப்பகிர்வு
•தொழில் அமைப்பின் மொத்தப் பணிச்சுமையும் ஒவ்வொரு தொழிலாளியின் திறமைக்கேற்ப சிறிய பணிகளாகப் பகிர்வு செய்யப்பட வேண்டும்.
•இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதுடன் தொழிலாளியின் செயல்திறனும் அதிகரிக்கும்.
ஒழுங்குமுறை
•கீழ்ப்படிதல், மற்றவர்களிடம் முறைப்படி நடத்தல், அதிகாரத்தை மதித்தல் பொன்றவை நிறுவனம் செம்மையாக நடைபெற இன்றியமையாததாகும்.
கட்டளையொருமை
•ஒவ்வொரு பணியாளரும் ஒரே ஒரு மேலதிகாரியிடமிருந்து மட்டுமே கட்டளைகளைப் பெற வேண்டும்.
•இதனால் குழப்பம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஊதியம்
•பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலை ஊதியம் ஆகும்.
•போதுமான ஊதியம் வழங்கினால் பணியாளர்கள் ஊக்கத்தோடு பணியாற்றுவார்கள்.
ஆணையுரிமை வரிசை
•ஆணையுரிமை வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து கீழ்மட்டத்திலுள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ்நோக்கி வரவேண்டும்.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *