Type Here to Get Search Results !

11 - கணக்குப்பதிவியல் - அலகு 1 - வினா-விடை

0
11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல்
STUDY MATERIALS

அலகு 1 கணக்கியல் அறிமுகம்

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.



அலகு 1 கணக்கியல் அறிமுகம் 


சரியான விடையைத் தேர்ந்தெடு: 


1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது 
ஆ) காரியதரிசிகளின் கணக்கியல் 

2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது 
ஈ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல் 

3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது 
ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

4. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது 
இ) இருப்புநிலைக்குறிப்பு 

5. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்? 
ஆ) பணியாளர் 

இரண்டு மதிப்பெண் வினாக்கள் 


1. கணக்கியலை வரையறு 

• கணக்கியல் என்பது குறைந்தபட்சம் ஒரு பகுதியானது நிதியியல் தன்மை கொண்ட மற்றும் பணத்தால் மதிப்பிடக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை, முறையாக பதியும், வகைப்படுத்தும் சுருங்கக்கூறும் மற்றும் அதன் விளைவுகளை தெரிவிக்கும் ஒரு கலையாகும் 
- அமெரிக்க பொதுக்கணக்காளர் சான்று நிறுவனம் 

2. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைக் கூறுக. 

• அளவிடுதல் 

 நிறுவனங்களின் செயல்திறனை அளவிட ஒரு கருவியாக செயல்படுகிறது 

• முன்னறிதல் 

 நிறுவனங்களின் எதிர்கால செயல்திறனை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது. 

3. கணக்கியல் செயல்பாட்டிலுள்ள படிநிலைகள் யாவை? 

• நடவடிக்கைகளை இனம் கண்டு குறிப்பேட்டில் பதிவு செய்தல் 

• எடுத்தெழுதுதல் மற்றும் இருப்புக்கட்டுதல் 

• இருப்பாய்வு தயாரித்தல் 

• வியாபாரக் கணக்கு தயாரித்தல் 

• இலாபநட்டக் கணக்கு தயாரித்தல் 

• இருப்புநிலைக் குறிப்பு தயாரித்தல் 

4. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்? 

• உரிமையாளர்கள் 

• பணியாளர்கள் 

• முதலீட்டாளர்கள் 

• அரசு 

5. கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக. 

• ரொக்க அடிப்படை 

• நிகழ்வு அல்லது வணிக அடிப்படை 

மூன்று மதிப்பெண் வினாக்கள் 



1. கணக்கியலின் பொருளை விளக்குக 

 கணக்கியல் என்பது நிதியியல் தகவல்களை இனம்காணுதல், அளவிடுதல், பதிவுசெய்தல், வகைப்படுத்துதல், சுருக்கமுணர்தல், உய்த்துணர்தல் மற்றும் தகவல்களைத் தெரிவித்தல் போன்ற முறையான செயல்பாடுகளை உள்ளடக்கியது. 

2. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக. 

 நிதிநிலைக்கணக்கியல் 

 ஏற்கனவே நடந்து முடிந்த நடவடிக்கைகளை கணக்கேடுகளில் பதிவு செய்வது 

 அடக்கவிலைக்கணக்கியல் 

 பொருட்கள், சேவைகளின் அடக்கவிலையை கணக்கிடுதல் சார்ந்தது 

 மேலாண்மைக்கணக்கியல் 

 முடிவெடுப்பதற்கும் அன்றாட செயல்பாடுகளுக்கும் துணை செய்வது 

 சமூகப்பொறுப்புணர்வு கணக்கியல் 

 கணக்கியல் தகவல்களை சமூகத்தின் பார்வையில் வழங்குவது. 

 மனிதவளக் கணக்கியல் 

 மனித வளத்தில் செய்த முதலீடுகளை அளவிடுதல், அறிவித்தல் சார்ந்தது 

3. கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக 

 முடிவெடுக்க உதவுதல் 

 நிர்வாகம் தக்க முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்களை அளிக்கிறது 

 சட்டச்சான்றாக இருத்தல் 

 வழக்குகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சான்றாக ஏற்கப்படுகின்றன 

 வரி கணக்கிடுதல் 

 வரிகள் கணக்கிடுதல் மற்றும் செலுத்தலில் அடிப்படை ஆதாரமாக இருக்கின்றன 

4. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? அ. முதலீட்டாளர்கள் ஆ. அரசு 

 அ. முதலீட்டாளர்கள் 

 நிறுவனத்தின் எதிர்கால இலாபத்தை பாதிக்கும் காரணிகள் குறித்து அறிந்து முதலீட்டு முடிவெடுக்க முதலீட்டாளர்கள் கணக்கியல் தகவல்களில் ஆர்வமாக உள்ளனர் 

 ஆ. அரசு 

 கொள்கை உருவாக்கம், வளங்களை ஒதுக்கீடு செய்தல், மானியம் மற்றும் சலுகைகளை வழங்குதல் போன்ற முடிவுகளை எடுக்க அரசு கணக்கியல் தகவல்களில் ஆர்வமாக உள்ளது 

5. நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக 

 ஏடுகளைப் பராமரிப்பவர் 

 நிதி சார்ந்த நடவடிக்கைகளை முறையாக பதிவுசெய்து ஏடுகளை பராமரிக்கிறார். 

 நிர்வாகத்திற்கு தகவல்களை தருபவர் 

 நிர்வாக முடிவுகளை எடுக்க தேவையான தகவல்களை நிர்வாகத்திற்கு தருபவர். 

 வணிகச் சொத்துக்களின் காப்பாளர் 

 சொத்துக்கள் பராமரிப்பு, காப்பீடு பற்றிய ஆலோசனையை நிர்வாகத்திற்கு வழங்குபவர்
    

Post a Comment

0 Comments