Home Ads

11/25/2020

12 - வணிகவியல் - பாடம் 1 - வினா-விடை

12 ஆம் வகுப்பு வணிகவியல்
STUDY MATERIALS

CHAPTER 1 மேலாண்மைத் தத்துவங்கள்

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

ஐந்து மதிப்பெண் வினா-விடை

PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


பாடம் 1 மேலாண்மைத் தத்துவங்கள்


சரியான விடையைத் தேர்ந்தெடு:


1. மேலாண்மை என்பது ---------- ன் செயல் ஆகும்.
அ) மேலாளர்

2. மேலாண்மை என்பது ஒரு ----------
இ) கலை மற்றும் அறிவியல்

3. அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கிய வளர்த்தவர் ----------
ஆ) டேலர்

4. வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ---------- என்பர்.
இ) வேலைப்பகிர்வு

5. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு ----------
ஆ) குறைவு

இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1. மேலாண்மை என்றால் என்ன?

• மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.

2. மேலாண்மை கருவிகளைப் பட்டியலிடுக.

• கணக்கியல்
• வணிகச் சட்டங்கள்
• உளவியல்
• புள்ளியியல்
• பொருளியல்
• தரவு செயலாக்கம்

3. மேலாளர் என்பவர் யார்?

• ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர் ஆவார்.

4. அதிகாரம் என்பதன் பொருள் தருக.

• அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

5. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

• ஒரு உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையே மேற்பார்வை வீச்செல்லை ஆகும்.

மூன்று மதிப்பெண் வினாக்கள்


1. மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

 ‘மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துவது’ – ஹென்றி ஃபோயல்

 ‘மேலாண்மை என்பது பன்நோக்கு செயல். அது வியாபாரத்தை மேலாண்மை செய்கிறது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. பணியாளரையும் பணியினையும் மேலாண்மை செய்கிறது’ – பீட்டர் டிரக்கர்

2. மேலாண்மை கலையா? அறிவியலா?

 மேலாண்மை என்பது கலையும் அல்ல. அறிவியலும் அல்ல. இரண்டின் தொகுப்பாகும்.
 அறிவியல் பூர்வமாக மேலாண்மைக் கோட்பாடுகளையும்
 கலையாக மேலாண்மைத் திறன்களையும் வெளிப்படுத்தி வணிக நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றுகிறது.

3. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக.

அடிப்படைமேலாண்மைநிர்வாகம்
முக்கிய நபர்மேலாளர்நிர்வாகி
பணி நிர்வாகம்,ஆளுமைசட்டம், தீர்மானித்தல்
பங்குநிறைவேற்றம்முடிவெடுத்தல்


4. டெய்லரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை?

 அறிவியல் கட்டை விரல் விதி அல்ல.
 இணக்கம், சச்சரவின்மை
 மனப்புரட்சி
 தனிமனிதத்துவம் அல்ல ஒத்துழைப்பு
 ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்குமான வளர்ச்சி

5. மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை?

 உயர் அதிகாரியின் திறமை
 பணியாளர்களின் திறமை
 பணியின் தன்மை
 திட்டமிடுதலின் தன்மை
 தகவல்தொடர்பு நுட்பங்கள்


ஐந்து மதிப்பெண் வினாக்கள்


1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி.

 அறிவின் தொகுப்பு

 வணிக உலகம், அரசுத்துறை, தனியார் துறை போன்றவற்றில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச்சீட்டு போன்றது மேலாண்மை.

 மேலாண்மைக் கருவிகள்

 கணக்கியல், வணிகச்சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் விரிவடைந்துள்ளது.

 தனிப்பாடப் பிரிவு

 பல்வேறு பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன.

 நடத்தை விதி

 வாங்குவோர் ஜாக்கிரதை என்ற கோட்பாட்டிற்கு பதிலாக ‘விற்பவர் ஜாக்கிரதை’ என்ற கோட்பாடு சந்தை நடைமுறைகளை தீர்மானிக்கிறது.

 பணி ரீதியானதொரு அமைப்பு

 மேலாண்மைப் பிரிவகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்து பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

2. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக.

 மேலாண்மை என்பது ஒருங்கிணைத்தல்

 நிறுவனத்தின் மனிதவளம், இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் பணம் ஆகிய வளங்களையும் அதன் செயல்பாடுகளையும் மேலாளர் ஒருங்கிணைக்கிறார்.

 மேலாண்மை ஒரு செயல்முறை

 திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்தல், இயக்குவித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மேலாளர் வளங்களை திறம்பட ஒருங்கிணைக்கிறார்.

 மேலாண்மை என்பது ஒரு திட்டமிட்ட செயல்முறை

 மேலாண்மை என்பது முன்கூட்டியே திட்டமிட்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடைவது

 மேலாண்மை என்பது ஒரு சமூக செயல்பாடு

 இது மற்றவர்களின் முயற்சி, ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.

 மேலாண்மை என்பது ஒரு சுழற்சியான செயல்முறை

 மேலாண்மை என்பது திட்டமிடல், செயல்பாடு, கட்டுப்படுத்துதல், மறுதிட்டமிடல் ஆகியவற்றின் சுழற்சியைக் குறிக்கிறது.

3. அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?

 அறிவியல், கட்டை விரல் விதி அல்ல.

 நிறுவனத்தின் திறனை உயர்த்துவதற்காக கட்டை விரல் விதிமுறைக்கு பதிலாக அறிவியல் ப+ர்வ வேலைப் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

 இணக்கம், சச்சரவின்மை

 மேலாண்மைக்கும் பணியாளர்களுக்கும் மிகச் சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

 மனப்புரட்சி

 நிர்வாகமும் பணியாளர்களும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே ஒருமித்த உணர்வு இருக்கவேண்டும்.

 தனிமனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு

 ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை நிர்வாகம் பணியாளர்கள் ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும்.
 முடிவெடுக்கும் செயல்முறையில் பணியாளர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

 ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்குமான வளர்ச்சி

 அறிவியல் பூர்வ முறையில் பணியாளர்களைத் தேர்வு செய்தல், பணியினை ஒதுக்குதல், பயிற்சி அளித்தல் ஆகியவை இருவருக்கும் தமது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவிப் புரிகின்றது.

4. நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி.

 வேலைப்பகிர்வு

 தொழில் அமைப்பின் மொத்தப் பணிச்சுமையும் ஒவ்வொரு தொழிலாளியின் திறமைக்கேற்ப சிறிய பணிகளாகப் பகிர்வு செய்யப்பட வேண்டும்.

 ஒழுங்குமுறை

 கீழ்ப்படிதல், மற்றவர்களிடம் முறைப்படி நடத்தல், அதிகாரத்தை மதித்தல் பொன்றவை நிறுவனம் செம்மையாக நடைபெற இன்றியமையாததாகும்.

 கட்டளையொருமை

 ஒவ்வொரு பணியாளரும் ஒரே ஒரு மேலதிகாரியிடமிருந்து மட்டுமே கட்டளைகளைப் பெற வேண்டும்.

 ஊதியம்

 பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையான ஊதியம் முதன்மை ஊக்குவிப்பாக இருப்பதால் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 ஆணையுரிமை வரிசை

 ஆணையுரிமை வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து கீழ்மட்டத்திலுள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ்நோக்கி வரவேண்டும்.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *