Home Ads

11/25/2020

12 - வணிகவியல் - பாடம் 3 - வினா-விடை

12 ஆம் வகுப்பு வணிகவியல்
STUDY MATERIALS

CHAPTER 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

ஐந்து மதிப்பெண் வினா-விடை


பாடம் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை

சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. --------- முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.
அ) குறியிலக்கு மேலாண்மை

2. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?
ஈ) அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது

3. முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ---------- உதவுகிறது.
ஆ) விதிவிலக்கு மேலாண்மை

4. ---------- உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
இ) குறியிலக்கு மேலாண்மை


இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1. குறியிலக்கு மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

• “குறியிலக்கு மேலாண்மை என்பது ஒரு நிர்வாக முறையாகும். ஒரு நிறுவனத்தின் உயர்நிலையில் மற்றும் கீழ் நிலையில் உள்ள மேலாளர்கள் கூட்டாக இணைந்து அதன் பொதுவான குறிக்கோள்களை அடையாளம் கண்டு எதிர்பார்க்கும் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு நபரின் முக்கிய செயல் பகுதியையும் பொறுப்புணர்வையும் அளவிட்டு செயல்பகுதியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மதிப்பிடுவது ஆகும்”- ஜார்ஜ் ஒடியோர்ன்

2. குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் என்ன?

• அளவிடுதல் மற்றும் செயல்திறனை மதிப்பிடுதல்.
• அமைப்பின் குறிக்கோளுடன் தனிப்பட்ட செயல்திறனை ஒப்பிடுதல்.

3. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

• நெறிமுறையிலிருந்து விலகிப்போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கும் கவனம் செலுத்துகின்ற வணிக நிர்வாகத்தின் ஒரு பாணி.

4. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

• அதிகாரப்பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
• செயல்திறன் முறையாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

5. முக்கிய முடிவுப் பகுதிகள் என்பது என்ன?

• இவை முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. இவை ஒரு அமைப்பின் வலிமையை குறிக்கின்றது
• உதாரணம்- இலாபம், சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்புகள்

மூன்று மதிப்பெண் வினாக்கள்

1. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

 நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளுடன் குறுகிய கால இலக்குகளை இணைக்க முயற்சி செய்கிறது.
 சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
 இலக்கு அமைக்கும் செயல்பாட்டில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

2. விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?

 எதிர்பார்ப்பு அல்லது குறிக்கோள்கள் அமைப்பது அவசியமாகிறது.
 இந்த நிகழ்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு உண்மையான செயல்திறனுடன் சமமாக ஒப்பிடப்படுகின்றன.
 விலகல் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
 முதுநிலை மேலாளர்கள் எந்த விலகலும் இல்லாதபோது எந்ந நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
 செயல்திறன்கள் கணிசமாக விலகிவிட்டால் முதுநிலை மேலாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
 இந்த விதிவிலக்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்

3. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் மூன்று செயல்முறைகளைப் பட்டியலிடுக.

 அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்.
 ஒவ்வொரு பிரிவின் இலக்குகளை நிர்ணயித்தல்.
 முக்கிய முடிவு பகுதிகளை நிர்ணயித்தல்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?

 மேலாளர்களுக்கு ஒட்டு மொத்த அமைப்பில் தங்களது பங்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
 பங்கேற்பு மேலாண்மைக்கு வகை செய்கிறது
 செயல்திறன் முறையாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
 அதிகாரப்பகிர்வு எளிதாக செய்யப்படுகிறது.
 ஒரு தொழிலாளியின் பொறுப்பு நிர்ணயிக்கப்படுகின்றது.
 மேலாண்மை நிர்வாகத்தால் மிக விரைவில் முடிவுகள் எடுக்கப்படுகிறது.

2. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் யாவை?

 மேலாளரின் நேரத்தை சேமிக்கிறது.
 நிர்வாக திறமைகள் மற்றும் ஆற்றல்கள் சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது.
 அதிகாரப்பகிர்வை எளிமையாக்குகிறது.
 முக்கியமல்லாத தகவலில் இருந்து முக்கியமான தகவலைப் பிரிக்கும் ஒரு தொழில் நுட்பம்.
 முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த அளவுகோல்.

3. குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.

 இது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி பெரும்பாலான செயல் நிர்வாகிகள் அறிந்திருப்பது இல்லை.
 அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
 குறுகிய கால குறிக்கோள்களை மட்டுமே வலியுறுத்துகிறது.
 கீழ்நிலை ஊழியர்களின் நிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை
 சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாத திடமான ஒன்றாகும்.

4. விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவாதிக்க.

 மேலாளர்கள் மட்டுமே மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் கீழ்நிலை ஊழியர்களின் உற்சாகம் குறைவாக உள்ளது.
 பிரச்சனைகளை மேலாளருக்கு தெரிவிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
 பிரச்சனைகளை சரிசெய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
 நடைமுறையிலிருந்து விலகிச்செல்லம் ஊழியர்களை நிர்வகிப்பது கடினம்.  புகாருக்கு காரணமானவர்களை கண்டறிந்து இறுதியில் வேலை நீக்கம் செய்கிறது.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *