Home Ads

11/27/2020

12 - வணிகவியல் - பாடம் 2 - வினா-விடை

12 ஆம் வகுப்பு வணிகவியல்
STUDY MATERIALS

CHAPTER 2 மேலாண்மைச் செயல்முறைகள்

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

ஐந்து மதிப்பெண் வினா-விடை

PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


பாடம் 2 மேலாண்மை செயல்முறைகள்


சரியான விடையைத் தேர்ந்தெடு:


1. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?
இ) திட்டமிடுதல்

2. பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?
அ) முடிவெடுத்தல்

3. ---------- ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
அ) ஒருங்கிணைத்தல்

4. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?
ஈ) கட்டுப்படுத்துதல்

இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1. திட்டமிடுதல் என்றால் என்ன?

• திட்டமிடுதல் என்பது எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான தற்போதைய மதிப்பீடு ஆகும்.

2. செயலூக்கமளித்தல் என்றால் என்ன?

• ஒரு பணியை விரைவாக செய்துமுடிப்பதையும், பணியாளர்களுக்கு பணியின் மீதான விருப்பத்தையும் வளர்க்க பணம் மற்றும் பணம் சாராத ஊக்குவிப்புகளை வழங்குவதையே செயலூக்கம் என்ற சொல் குறிக்கும்.

3. கட்டுப்படுத்துதல் என்றால் என்ன?

• முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தர அலகுகளுடன் உண்மையான செயல்திறனை எது ஒத்திசைக்க உதவிபுரிகிறதோ அது கட்டுப்படுத்துதல் ஆகும்.

4. மேலாண்மையின் துணைப்பணிகளை பட்டியலிடுக.

• புதுமைப்படுத்துதல்
• பிரதிநிதித்துவம்
• முடிவெடுத்தல்
• தகவல் தொடர்பு

5. திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய பழமொழி என்ன?

• செயல்படுவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள்
• ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்

மூன்று மதிப்பெண் வினாக்கள்


1. மேலாண்மையின் முதன்மைப் பணிகளை பட்டியலிடுக?

 திட்டமிடுதல்
 ஒழுங்கமைத்தல்
 பணியமர்த்தல்
 இயக்குவித்தல்
 கட்டுப்படுத்துதல்
 ஒருங்கிணைத்தல்
 செயலூக்கமளித்தல்


2. பணியமர்த்தல் என்றால் என்ன?

 பணிக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுப்பது, தேவையான நபர்களுக்கு பயிற்சி அளிப்பது, சிறந்த நபர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, பழைய நபர்களுக்கு ஓய்வு அளிப்பது அனைத்து நபர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்வது, பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவது ஆகியன பணியமர்த்துதலில் அடங்கியுள்ளது.

3. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

 வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் எனப்படும்.

 வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

 நுகர்வோர்கள் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகின்றனர்.

4. ஒருங்கிணைத்தல் என்றால் என்ன?

 ஒவ்வொரு நிர்வாக செயல்பாடுகளும் ஒருங்கிணைத்தலில் உள்ளடங்கியுள்ளது.

உதாரணமாக 1.திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு
2.ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு
3.பணிக்கமர்த்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு
4. இயக்குதல் மற்றும் ஒருங்கிணைப்பு
5.செயலூக்கமளித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு
6. கட்டுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு

 ஒருங்கிணைப்பு இடர்பாட்டின் அளவு நிறுவன அமைப்பின் அளவைச் சார்ந்திருக்கும்.

 நிறுவன அமைப்பின் அளவு அதிகரிக்கப்படும்போது ஒருங்கிணைப்பு இடர்பாட்டின் அளவும் அதிகரிக்கும்.

5. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கியத் தகவல்கள் எவ்வாறு தெரிவிக்கப்படும்?

 அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு, பணியாளர்களை இயக்கும் பொருட்டு சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் கையேடுகள், செய்திமடல்கள், அறிவிப்பு பலகைகள், கூட்டம், பங்கேற்பு இயக்கம் ஆகியவற்றின் மூலமாக பணியாளர்களுக்கு தேவையான அனைத்து முக்கியத் தகவல்களும் தெரிவிக்கப்படும்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்


1. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

திட்டமிடுதல்

 திட்டமிடுதல் என்பது எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான தற்போதைய மதிப்பீடு ஆகும்.
 முன்கூட்டியே முடிவு எடுப்பதைக் குறிக்கிறது.

பணியமர்த்தல்

 பணிக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுப்பது, தேவையான நபர்களுக்கு பயிறசி அளிப்பது, சிறந்த நபர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, பழைய நபர்களுக்கு ஓய்வு அளிப்பது, அனைத்து நபர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்வது மற்றும் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவது ஆகியன பணியமர்த்துதலில் அடங்கியுள்ளது.

இயக்குவித்தல்

 அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பணியாளர்களை இயக்கும் பொருட்டு சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் கையேடுகள், செய்திமடல்கள், அறிவிப்பு பலகைகள், கூட்டம், பங்கேற்பு இயக்கம் ஆகியவற்றின் மூலமாக பணியாளர்களுக்கு தேவையான அனைத்து முக்கியத் தகவல்களும் தெரிவிக்கப்படும்.

கட்டுப்படுத்துதல்

 முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தர அலகுகளுடன் உண்மையான செயல்திறனை எது ஒத்திசைக்க உதவி புரிகிறதோ? அது கட்டுப்படுத்துதல் ஆகும்.

செயலூக்கமளித்தல்

 ஒரு பணியை விரைவாக செய்துமுடிப்பதையும், பணியாளர்களுக்கு பணியின் மீதான விருப்பத்தையும் வளர்க்க பணம் மற்றும் பணம் சாராத ஊக்குவிப்புகளை வழங்குவதையே செயலூக்கம் என்ற சொல் குறிக்கும்.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *