Type Here to Get Search Results !

SALVATION OF A SAINT BY KEIGO HIGASHINO

0

                                                     

டிடக்டிவ் கலிலியோ சீரிஸ்


ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மனபு யிகாவா. காவல்துறையால் தீர்க்க முடியாத சில வழக்குகளை தீர்ப்பதில் வல்லவர். 


MILLENNIUM TRILOGY என்று உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட, வாசிக்கப்பட்ட நாவல்களின் முதல் நாவலான THE GIRL WITH DRAGON TATTOO வின் ஆசிரியர் STIEG LARSON ஆவார். ஜப்பான் நாட்டின் STIEG LARSON என அழைக்கப்படுபவர் தான் கேகோ இகாஷினோ.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, ஜித்து ஜோசப் எழுதி இயக்கிய திரிஷ்யம்  THE DEVOTION OF SUSPECT X என்ற நாவலின் கருவைக் கொண்டதே. இந்ந நாவலே கொரிய படமான PERFECT NUMBER ஆகும். தமிழில் கொலைகாரன். இந்நாவலை எழுதியவர் கேகோ இகாஷினோவாகும்.

இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரரின் ஜப்பானிய மொழி க்ரைம் த்ரில்லர் நாவலான SALVATION OF A SAINT பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். கதையின் சாராம்சத்தை ஒற்றை வார்த்தையில் சொல்கிற மாதிரியான தலைப்பு.

அயனே யோஷிடாகாவின் காதல் மனைவி. இவர்களுக்கு குழந்தையில்லை. யோஷிடாகா வீட்டில் இருக்கும்போது அவனுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் கொஞ்சமும் சலிப்பின்றி செய்து வருகிறாள். ஆனால்  குழந்தையில்லாததால் யோஷிடாகா தன் மனைவி அயனேவிடம் விவாகரத்து பெற்றுக்கொள்ள வற்புறுத்துகிறான். யோஷிடாகாவுக்கும் தன்னிடம் பணிபுரியும் ஹிரோமிக்கும் உள்ள தொடர்பும் அதனால் ஹிரோமி கர்பமாக உள்ளதும் அயனேக்கு தெரியும். ஹிரோமியை திருமணம் செய்து கொள்ளவே விவாகரத்து கேட்கிறான் என்பதை அறிந்து அயனே விவாகரத்து தொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறாள். ஒரு நாள் அயனேவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என தகவல் வருகிறது. எனவே அயனே 100 மைல் தாண்டியுள்ள தன் தந்தையை பார்த்து வர செல்கிறாள். 

அன்றிரவு ஹிரோமி, யோஷிடாகாவுடன் அவனது வீட்டில் தங்குகிறாள். அடுத்த நாள் காலை டீ போட்டு அவனுக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். அன்று மாலை ஹிரோமி, யோஷிடாகாவிற்கு கால் செய்ய, அவன் எடுக்காமல் போகவே நேராக அவன்  வீட்டிற்கு செல்கிறாள். அங்கே யோஷிடாகா இறந்து கிடக்கிறான்.


டிடக்டிவ் குஷ்நாகி  விசாரணையை துவக்குகிறார். தற்கொலைக்கான எந்த சாத்தியக்கூறும் தென்படவில்லை. உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. டிடக்டிவ் குஷ்நாகி உடலை உடற்கூறு செய்ய அனுப்புகிறார். உடற்கூறு ஆய்வில் சயனைட் விஷம் மூலம் அவன் இறந்திருக்கிறான் என்று தெரிகிறது. யோஷிடாகாவை இறுதியாக உயிருடன்  பார்த்தது ஹிரோமி என்பதால், அவர் மீது சந்தேகம் வருகிறது.

யார் அவனுக்கு சயனைட் கொடுத்திருப்பார் என்பதை கதையின் 100 பக்கத்திற்கும் முன்பாகவே நாம் யூகித்து அறிய முடியும். மீதமிருக்கிற 200 சொச்சம் பக்கங்களில் என்ன சொல்லிவிட போகிறார் என்று பார்த்தால், சயனைட் எப்படி கொடுக்கப்பட்டது என்பதை விருவிருப்புடன் நாற்காலியின் நுனிக்கே செல்ல வைத்து சொல்கிறார் கேகோ இகாஷினோ.

துப்பறியும் நாவல்கள் பெரும்பாலும் யார் கொலைகாரன்? என்ற கேள்விக்கு விடை கண்டறியும்படி எழுதப்படும் அல்லது எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவல் யார்? என்ற கேள்வியைவிட எப்படி கொலை செய்யப்பட்டான்? என்ற கேள்விக்கு விடை தேடும் விதமாக உள்ளது.

எப்படி கொலை செய்யப்பட்டான் யோஷிடாகா?

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை நினைவுபடுத்துகிறது இந்நாவல்.

 Its a complete Page Turner.

 அவசியம் படிக்க வேண்டிய க்ரைம் த்ரில்லர்.


Post a Comment

0 Comments