Home Ads

5/09/2020

MURDER HOUSE BY JAMES PATTERNSON


MURDER HOUSE
BY
JAMES PATTERSON


த்ரில்லர் வகை நாவல்களின் முடிசூடா மன்னராக திகழும் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதிய த்ரில்லர் நாவல்தான் மர்டர் ஹவுஸ். நியுயார்க் மாகாணத்தின் கடற்கரை கிராமத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் மர்டர் ஹவுஸ்.

நியுயார்க் போலீசில் பணிபுரிந்து வரும் சென்னா மர்பி சில புகார்கள்  காரணங்களுக்காக பணியிலிருந்து விலகி விடுகிறார். அவருடைய உறவினர் ஜேம்ஸ் கடற்கரையோர கிராம காவல் துறையில் தலைவராக உள்ளார். அவர் தன் கிராம காவல்துறையில் சேர்ந்து கொள்ள சென்னாவை அழைக்கிறார். அவரும் அழைப்பை ஏற்று சேர்ந்து கொள்கிறார்.

அது கடற்கரை கிராமம் என்பதால் சில நேரங்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். கடற்கரையில் பல பெரிய மாடமாளிகைகளும் உள்ளன. அப்படிப்பட்ட மாடமாளிகைகளில் ஒன்றுதான் நம்பர் 7 ஓசன் டிரைவ். இது பல ஆண்டுகளாக யாரும் வசிக்காத இடமாகும். இங்கே இப்போது இரண்டு நபர்கள் இறந்து கிடக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்.

அக்கொலைகளை விசாரிக்க சென்னா முயல அதை ஜேம்ஸ் தடுத்து தானே விசாரிக்கிறார். அக்கொலைகளை செய்ததாக ஒருவனை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் அவனை சிறைக்கு அனுப்புகிறார். இப்போது ஜேம்ஸ் கொல்லப்பட்டு கிடக்கிறார்.  இக்கொலையை சென்னா விசாரிக்கிறார். அடுத்தடுத்து ஏற்படும் சம்பவங்களினால் சென்னா மீதே கொலைப்பழி விழுகிறது. சென்னாவை கைது செய்ய போலீஸ் துரத்துகிறது.

ஜேம்ஸ் ஐ கொன்றது யார்? ஏன்? சென்னாவுக்கு என்ன ஆனது?
ஏன் சென்னாவை முதலிரண்டு கொலைகளை விசாரிக்க வேண்டாம் என்றார் ஜேம்ஸ்? 
உண்மையில் சிறையில் இருப்பவன்தான் கொலை செய்தவனா?
சென்னா ஏன் நியுயார்க் போலீஸிலிருந்து விலகினாள்?
சென்னாவுக்கும் அக்கிராமத்திற்கும் என்ன தொடர்பு?
சென்னாவுக்கும் நம்பர் 7 ஓசன் டிரைவ் பங்களாவுக்கும் என்ன சம்பந்தம்?

என அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு சுவாரசியமாக விடை அளித்திருக்கிறார் பேட்டர்சன்.

த்ரில்லர் விரும்பிகள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *